எங்கள் நிறுவனம் வளர்ச்சிகளை குறித்து.

எங்கள் நிறுவனத்தின் தொடக்க வருடம் 2012 ஆம் ஆண்டு, ஒரு சிறிய 800 சதுரடி அறையில் தொடங்கியது எங்கள் கனவு... எங்கள் JK ஸ்டோர்! அந்த சிறிய இடத்தில் இருந்த போதும், தரமே எங்கள் வாழ்வும் இலக்குமாக அமையச் செய்தோம். 2018 ஆண்டு எங்கள் நிறுவனத்தை விரிவுபடுத்த சின்னமனூர் நகருக்கு வந்து 1200 சதுர அடி பரப்பில், பின்னர் முறையாக திட்டமிட்டு வளர்ச்சி செய்து, இன்று 15,000 சதுர அடியில் ஜேகே சூப்பர் மார்க்கெட் பரந்து விரிந்துள்ளது.இந்தப் பயணம் எளிதல்ல. குறிப்பாக கொரோனா காலத்தில் பல தடைகள் வந்தன. ஆனாலும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும், எங்கள் தரமான பொருட்கள் வழங்கும் உறுதியும் தான் எங்களுக்கு இன்றைய நிலையைச் அடையச் செய்தது. எப்போதும் தரத்தை குறைக்காமல், விலையை நிலைநாட்டி, கடின உழைப்பில் தொடர்ந்து இருந்தோம். அதன் பலனாக இன்று உலக தரங்களுக்கான ISO சான்றிதழ் எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்தது. இது எங்கள் நிறுவத்தின் தரத்தையும் நம்பிக்கையையும் உறுதி செய்யும் பெரும் சாதனையாகும். இது வெறும் வெற்றி அல்ல, எனது வாடிக்கையாளர்களின் மகத்தான ஆதரவின் பலனாகும்.நம்பிக்கை, தரம், மற்றும் எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் நிறுவனம் போல் கருதி எங்கள் குறை நிறைகளை அவ்வப்போது எடுத்துரைத்து எங்களுக்கு இன்று வரை ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்கள் , உங்கள் அன்பும் ஆதரவுடன், JK சூப்பர் மார்க்கெட் தொடர்ந்து வளர்ந்து, சிறந்த சேவையை வழங்கத் தொடரும்!

தலைமையாளர் உறுதிமொழி

என் பெயர் A கண்ணன் நான் JK சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை இருக்கையை ஏற்றுள்ளேன்.இந்த நிறுவனம் ஒரு கனவாக ஆரம்பமானது. ஆரம்பத்தில், நான் ஒரு சிறிய குழுவுடன் பல சவால்களை எதிர்கொண்டு, வித்தியாசமான துறைகளை ஒருங்கிணைத்துகொண்டு, சிறந்த நம்பகத்தன்மை வாய்ந்த நண்பர்கள் நண்பர்களின் பிள்ளைகள் ஊழியர்கள் ஒன்று இணைத்தேன். இதை நான் தனிப்பட்ட முறையில் செய்ந்திருந்தாலும், என் நண்பர்கள் உறுதுணையோடு எப்போதும் என்னுடன் நின்று ஆதரவாக இருந்தார்கள்.என் புதிய கட்டடத்திற்கு இரண்டு வருடங்களாக நான் நின்று உழைத்தேன். ஒவ்வொரு வேலையும், சிறியது முதலே பெரியது வரையான அனைத்து பணிகளும் நான் கடினமாகவும் தன்னிச்சையாகவும் செய்து முடித்துள்ளேன்.எங்கள் நிறுவனத்திற்கு தேவையான கட்டிட வரைவு முதல் உள் வடிவமைப்புக் கலை வரை, எனக்கு எனது இன்ஜினியர் உறுதுணையாக நான் கூறிய அனைத்து பணிகளும் செய்து , ஒவ்வொரு நிபுணரும் தங்களுடைய குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கிய நண்பர்கள் உரிய நேரத்தில் வேலை முடித்துக் கொடுத்தார்கள்.எங்கள் குழுவின் தனித்துவம் மற்றும் ஒருங்கிணைந்த முயற்சி தான் எங்கள் வளர்ச்சிக்கு ஆதாரம். நான் தலைமை ஏற்ற பணியைநிறைவடையச் செய்துள்ளேன். இது எங்கள் வலிமையாகும்.எங்கள் குழுவை மேலும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்,

PROPRIETOR : Mr. A KANNAN